அதிமுகவுக்கு தாவிய பாஜகவின் முக்கிய புள்ளிகள்..! எடப்பாடி முன்னிலையில் ஐக்கியம்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் நேற்று முன்தினம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலுவதாக தனது அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கான காரணத்தை தனது அறிக்கையின் மூலம் வெளிப்படுத்திய அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இந்த நிலையில் நேற்று தமிழக பாஜகவின் மாநில ஐடி விங் செயலாளர் தினேஷ் கண்ணன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  மற்றும் அவரால் செயல்படும் வார் ரூம் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த அவர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

நேற்று முன்தினம் தமிழக பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். 

இதற்கு தமிழக பாஜக தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழக பாஜகவின் இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு பிரிவு மாநில தலைவராக உள்ள அமிரசாத் ரெடி எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கிடையில் நேற்று தமிழக பாஜக ஐடி விங் மாநிலச் செயலாளர் திலீப் கண்ணன் விலகிய நிலையில் சற்று முன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருடன் பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி, திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய், பாஜக முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இவர்களுடன் நேற்று முன்தினம் பாஜகவில் இருந்து விலகிய சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். தமிழக பாஜகவில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைவது அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கும் விரிசலை அதிகப்படுத்தி உள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நாட்டா தமிழகம் வர உள்ள நிலையில் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP IT Wing State Secretary Dilip Kannan joins AIADMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->