திரிபுரா சட்டமன்ற தேர்தல்., 48 வேட்பாளரை அறிவித்தது பாஜக! - Seithipunal
Seithipunal


திரிபுரா சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் பிப்ரவரி 16ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 36 இடங்களை கைப்பற்றிய பாஜக ஆட்சி அமைத்தது. அதேபோன்று தற்பொழுது நடைபெறும் பொது தேர்தலிலும் அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திரிபுரா சட்டமன்ற பொது தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 11 பெண்கள் உட்பட 48 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது திரிபுரா அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பாஜக அமைச்சரை தவிர மற்ற அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று 6 பாஜக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தற்போதைய பாஜக முதல்வர் மாணிக் சாகா போர்டோவாலி தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்த மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ மொபோஷர் அலி கைலாஷகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ஐபிஎஃப்டி உள்ளிட்ட பழங்குடியினர் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்படலாம் என்பதால் 10 தனி தொகுதிகளுக்கான வேட்பாளரை பாஜக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP announced 48 candidates for tripura election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->