பயங்கர எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை வெளியாகிறது பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்.!
bihar vote list released tomorrow
பீகார் மாநிலத்தில் வரும் சட்டசபை தேர்தலை யொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்கட்ட திருத்தப் பணிகள் முடிந்தநிலையில், தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளது.
அதாவது பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்கள் "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவுகளின்படி, நாளை வெளியிடப்பட உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் சம்மந்தப்பட்ட தரப்புக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.
இதன் மூலம் தேர்தல் அதிகாரிகளிடம் எந்த ஒரு வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியோ நாளை முதல் செப்டம்பர் 1 வரை காணாமல் போன தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.
English Summary
bihar vote list released tomorrow