பீகார் நம்பிக்கை வாக்கெடுப்பு: ஆட்சியை தக்கவைத்துக்கொள்வாரா நிதிஷ் குமார்? - Seithipunal
Seithipunal


பீகார் முதல்-மந்திரி ஆக இருக்கும் நிதீஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தார். லாலு யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரி ஆக இருந்தார். 

இதனை அடுத்து நிதிஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் இணைந்ததால் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். 

அதன் பிறகு பாஜக ஆதரவுடன் மீண்டும் நிதிஷ்குமார் முதல் மந்திரி ஆக பதவியேற்றார். இந்நிலையில் மீண்டும் முதல் மந்திரி ஆக பதவியேற்ற நிதீஷ் குமார் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபித்து காட்ட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். 

இந்த சூழலில் இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பீகார் சட்டசபையில் 243 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar trust vote Nitish Kumar retain power


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->