பீகார் தேர்தலில் மோசடி... ஆனால் 'நிரூபிக்க ஆதாரமில்லை' - பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு!
bihar election bjp prasanth kishore
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன சூராஜ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்திருக்கலாம் எனப் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கையில், தான் மாதக்கணக்கில் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின் போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துக்களுக்கும், உண்மையான வாக்குப்பதிவின் போக்குகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தார். இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளதாகச் சந்தேகம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகள்: சில வெல்ல முடியாத சக்திகள் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும், இவற்றை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பண விநியோகம் குறித்து விமர்சனம்:
தேர்தலுக்கு முன் என்.டி.ஏ. அரசு சார்பில் ஒன்றரை கோடிப் பெண்களுக்கு வங்கிக் கணக்குகளில் ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்தும் அவர் விமர்சித்தார். "இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் ஒரு அரசாங்கம் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
bihar election bjp prasanth kishore