2026-ல் ஓய்வு பெறும் தோனியை வெற்றியுடன் வழியனுப்புவது எங்களின் கனவு – தோனி பயிற்சியில் இதை செஞ்சு பார்த்ததில்ல.. ஹசி பேட்டி
Our dream is to see Dhoni who will retire in 2026 off with a win I didnot see Dhoni do this in training Hasi interview
இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான எம்எஸ் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் தொடரில் இன்னும் செம்மையாக செயற்பட்டு வருகிறார். 3 ஐசிசி வெள்ளைப்பந்து உலக கோப்பைகள், 5 ஐபிஎல் கோப்பைகள் என சாதனைகளின் சிகரம் பிடித்த தோனி, தற்போது 44 வயதை கடந்த நிலையிலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது தனித்துவத்தை தொடர்ந்து காட்டி வருகிறார்.
2026 ஐபிஎல் தொடரை அடுத்து தோனி ஓய்வெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மற்றும் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தோனியைப் பற்றிய மனம் தொட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு ஆஸ்திரேலிய யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஹசி கூறியதாவது:“தோனி மிகவும் அற்புதமானவர். அவருடைய அறைக்கதவுகள் 24 மணி நேரமும் திறந்திருக்கும். யாராலும் எப்போதும் உள்ளே சென்று பேசிக்கொள்ளலாம். அணியை ஒன்றாக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை அவர் நன்றாக அறிவார்.”
அதோடு அவர் மேலும் கூறுகிறார்:“நிறைய வீரர்கள் தங்கள் உணவை எடுத்துக்கொண்டு நேராக தோனியின் அறைக்கு செல்வார்கள். அங்கு உட்கார்ந்து பேசுவார்கள். தலைவராக அவர் காட்டிய அந்த எளிமை உண்மையிலேயே மிகவும் அபாரமானது.”
தோனியின் விக்கெட் கீப்பிங் திறமை குறித்து உலகம் முழுவதும் பாராட்டுகள் கிடைத்தாலும், அதற்கு அவர் தனியாக பயிற்சி எடுத்ததை நான் ஒருபோதும் பார்த்ததில்லை என்றும் ஹசி கூறினார்.
“தோனியை நான் விக்கெட் கீப்பிங் பயிற்சி எடுப்பதை ஒருபோதும் பார்க்கவில்லை. ஆனால் பேட்டிங் மட்டும் மணி கணக்கில் எடுப்பார். ஆயிரக்கணக்கான பந்துகளை எதிர்கொண்டு அடிப்பார்.”
ஹசி 8 ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடி, பின்னர் 8 ஆண்டுகள் பயிற்சியாளராக தொடர்ந்தவர். இந்த அனுபவங்களின் அடிப்படையில் தோனி எப்படி ஒரு அணியை ஒன்றாக இணைப்பார் என்பதை அவர் சிறப்பாக விளக்கினார்.
2026 சீசனுக்குப் பிறகு தோனி ஓய்வெடுப்பார் என்று பல தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,“தோனியை வெற்றியுடன் வழியனுப்புவதே சிஎஸ்கே அணியின் மிகப் பெரிய இலக்கு”என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோனியின் தலைமையில் இறுதியாக இன்னொரு கோப்பையை தூக்குவது சென்னை ரசிகர்களின் கனவு. இதை நனவாக்குவதற்காக தளம் அமைத்து வரும் சிஎஸ்கே அணியின் தயாரிப்பும் தீவிரமாகி வருகிறது.
English Summary
Our dream is to see Dhoni who will retire in 2026 off with a win I didnot see Dhoni do this in training Hasi interview