இனி வீடுகளுக்கு 125 யூனிட் மின் இலவசம் – பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு!
Bihar cm announce
பிகாரில் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் புதிய நலத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதில், ஆகஸ்ட் 1, 2025 முதல் அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்திற்கு 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கான நடைமுறை, ஜூலை மாத மின் கட்டணத்திலேயே அமலுக்கு வரும். இதன்மூலம் 1.67 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தின் அனைத்து வீடுகள் மற்றும் பொது இடங்களில் சூரிய மின் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு சூரிய மின்சாரம் அமைக்கும் செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும். மற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.
இத்துடன், பிகாரில் சூரிய மின்சார உற்பத்தி திறன் 10,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்தப்படும் எனவும் அவர் கூறினார்.