பீஹார் முதலமைச்சர் நிதீஷ்குமார் கிராமத்திற்கு நுழைந்த பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


பீஹார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் சொந்த ஊரான நாலந்தா மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற போது ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் அரசியல் ஆலோசராகவுள்ளார். இதில் மக்கள் மனம், வேட்பாளர் தேர்வு, பிரசார திட்டம் என்று வழக்கமாக உள்ள தேர்தல் பார்முலாவை அரசியல் களத்தில் மாற்றியவர். அத்துடன், அரசியல் ரீதியான சில கூட்டணி, தேர்தல் ஓட்டு சதவீதக் கணக்குகள், அதற்கான அச்சார வேலைகள், பப்ளிசிட்டி இதுவே வெற்றிக்கு போதுமானது என்ற அஜெண்டாவை அரசியல் கட்சிகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.

சிறந்த அரசியல் வியூக அமைப்பாளரான இவர் கோதாவில் ஜன் சுராஜ் என்ற கட்சியை ஆரம்பித்து, பீகார் மாநில தேர்தலில் கால் வைத்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அங்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட இவரது கட்சி அங்கு மண்ணைக் கவ்வியது.

இருப்பினும், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பல வியூகங்களை பிரசாந்த் கிஷோர்வகுத்து வருகிறார். இதற்காக மாநில முதலமைச்சர் நிதீஷ்குமாரை கடுமையாக விமர்சித்து வருவதோடு, மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நிதீஷ்குமாரின் சொந்த ஊரான நாலந்தா மாவட்டத்தில் உள்ள கல்யாண் பிக்கா என்ற ஊருக்கு சென்ற போது பிரசாந்த் கிஷோரை ஊரின் எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதன் போது, போலீஸ் உயரதிகாரிக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரசாந்த் கிஷோர் கூறுகையில், 'கிராமத்திற்கு வர உங்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா..?  எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் இங்கிருந்து திரும்பிச் செல்வேன். என்னை மிரட்டுகிறீர்களா..? நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பவர்கள்.' என்று கடுமையாக வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளதால், நீங்கள் அனுமதி வாங்க வேண்டியது அவசியம் என்றும், மக்கள் புகார் அளித்துள்ளனர். அத்துடன், உங்களை தடுப்பது எனது நோக்கம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், அந்த பகுதியில் ப ரபரப்பு நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Chief Minister Nitish Kumar village was stopped by Prashant Kishor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->