பெரிய தீபம் சர்ச்சை: கோவிலில் பவுன்சர் நியமனம் தடை..! - கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!
Big Deepam controversy Ban appointment bouncer temple Kerala High Court strongly condemns
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் திருப்புனித்துறாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பூர்ணத்ரயீசர் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் “பெரிய தீபம்” விழா கோடி கணக்கான பக்தர்களை திரளவைத்து வருகின்றது. இந்த முறை பெரும் திரளைக் கட்டுப்படுத்துவதற்காக பவுன்சர்கள் நியமிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதற்கு எதிராக மராடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு, நீதிபதிகள் ராஜா, விஜயராகவன், ஜெயக்குமார் அடங்கிய அமர்விற்கு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதத்தில்,கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை என்பது காவல்துறையினதும் தேவசம்போர்டின் பொறுப்பும் ஆகும்; ஆனால் “பவுன்சர்கள்” என வெளிப்படையாக டி-ஷர்ட்டில் குறிப்பிட்டு, கருப்பு உடையணிந்து பணியமர்த்தப்பட்ட இருப்பது மரபு, மரியாதைக்கு எதிரானது என சுட்டிக்காட்டப்பட்டது.
தேவசம்போர்டு தரப்பு விளக்கம் அளித்தபோது,பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அபரிதமாக உயர்ந்ததால் முன்னாள் ராணுவ வீரர்கள் போதாத சூழலில் மட்டுமே பவுன்சர்கள் சேர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இருதரப்பினரின் வாதங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்றம், முக்கியமான தீர்ப்பை வழங்கியது,கோவில்களில் பாதுகாப்பு பணிக்கோ கூட்ட நிர்வாகத்துக்கோ பவுன்சர்கள் நியமிக்கப்படக் கூடாது; மேலும் “பவுன்சர்” என்று குறிப்பிடப்பட்ட டி-ஷர்ட்டோ, மரபில் பொருந்தாத உடையாளர்களோ கோவில் பாதுகாப்பில் பயன்படுத்தப்படக் கூடாது என தெளிவான உத்தரவு பிறப்பித்தது.
English Summary
Big Deepam controversy Ban appointment bouncer temple Kerala High Court strongly condemns