பரபரப்பில் அரசியல் களம்: பெங்களூருவில் அமித்ஷா இன்று ரோடு ஷோ.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று பெங்களூருவில் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக நேற்றிரவு பெங்களூரு வந்தார். இன்று பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியான ஜனதா தளம் நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். 

இதனை தொடர்ந்து சிக்கபள்ளாப்பூர், தும்கூர், பிதார், பெல்காம் போன்ற பாராளுமன்ற தொகுதிகளின் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

பின்னர் பெங்களூரு ஊரக பாராளுமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் அமித்ஷா ரோடு ஷோவில் பங்கேற்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். இவருடன் ஜனதா தளம் மாநில தலைவர் குமாரசாமியும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Amit shah road show today


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?
Seithipunal
--> -->