கர்நாடகா || கல்லூரி உணவகத்தில் சரமாரிய அடித்துக் கொண்ட மாணவிகள் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் தயானந்த சாகர் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி உணவகத்தில் மாணவிகள் அனைவரும் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென இரு மாணவிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இந்த வாக்குவாதத்தில் ஒரு மாணவி பேசி கொண்டிருக்கும்போதே, திடீரென மற்றொரு மாணவியின் கன்னத்தில் அடித்து விட்டார். இதனால் கோபமடைந்த, மாணவி அந்த மாணவியை பதிலுக்கு பல முறை அடித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்தபோது, அருகிலிருந்த மாணவிகள் அதனை தடுக்க முன்வராமல், ஒன்றாக கோஷம் எழுப்பி அவர்களை மேலும்  சண்டையை தூண்டி விடும் வகையில் செய்துள்ளனர். இருப்பினும் இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று தெரியவரவில்லை.

சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு ஆசிரியைகள் மோதி கொண்ட காட்சிகள் வைரலான நிலையில், பெங்களூருவில் மாணவிகளுக்கு இடையே மோதிக்கொண்ட  வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

banglore college students fight in canteen


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->