1 வயது குழந்தைக்கு எமனாக வந்த ரம்புட்டான் பழம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.!!
baby died for sick Rambutan fruit in kerala
கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் பெருசேரில் பகுதியை சேர்ந்தவர் ஆதிரா. இவர், தனது குடும்பத்துடன் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே மருது சந்திப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்த நிலையில், ஆந்திராவின் மகன் அவ்யந்த் நேற்று மாலை 5 மணியளவில் தனது பாட்டியுடன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை வீட்டில் இருந்த ரம்புட்டான் பழத்தை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த நிலையில், திடீரென வாயில் போட்டு விழுங்கியுள்ளது. இதில் எதிர்பாராதவிதமாக பழம் தொண்டையில் சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பழத்தை எடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அதன் பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரும்பாவூர் அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து பெரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரம்புட்டான் பழம் தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
baby died for sick Rambutan fruit in kerala