அயோத்தி கோவில் நிர்வாகிகள் திருப்பதியில் திடீர் ஆய்வு! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதிலும் இருந்து அயோத்தி ராமரை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தினமும் வரும் லட்சக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் அயோத்தி அறக்கட்டளை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

லட்சக்கணக்கான பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவது குறித்து திருப்பதி, சபரிமலை மற்றும் மாதா வைஷ்ணவி தேவி கோவில் போன்ற இடங்களில் அயோத்தி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொள்ள முடியும் செய்துள்ளனர். 

இந்நிலையில் ஒரு சில நாட்களில் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர உள்ளனர். கோவிலில் பக்தர்களை ஒழுங்குபடுத்துதல், வாகனங்கள் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பார்க்கிங் செய்தல், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். 

மேலும் பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்கள், உணவு தயாரிக்கும் இடம், பிரசாதம் விநியோகிக்கும் முறை, மலைப்பாதையில் வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றையும் ஆய்வு செய்ய உள்ளனர். 

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு அயோத்தி அறக்கட்டளை நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அயோத்தி அறக்கட்டளை நிர்வாகிகள் சபரிமலைக்கு சென்று பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya temple administrators inspection Tirupathi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->