அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்..! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22, 2024 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்று திறப்பு விழா கண்டது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வரலாற்று சிறப்புமிக்க விழாவைத் தொடங்கி வைத்தார். 

பல தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட ராமர் கோவிலில் நாடு முழுவதும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த ஸ்ரீ ராமர் கோவிலில் அதிகாலை 04 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 07 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. பின்னர் இரவு 09 மணியளவில் நடை அடைக்கப்படும்.  தற்போது அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இனிவரும் காலங்களில் இரவு 09 மணிக்கு பதிலாக 08.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதியம் 12.30 மணி முதல் மதியம் 01 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, மதியம் 01 மணிக்கு மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya Shri Ram Temple Darshan Timings Changed


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->