அயோத்தி தீபோற்சவம் விழா || முதல்முறையாக பங்கேற்கும் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


வருகிற 24 ந்தேதி வரும் தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் பிரமாண்ட தீபோற்சவம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி வழிபடும் இந்த நிகழ்ச்சி 6-வது முறையாக இந்த ஆண்டும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு சரயு நதிக்கரையில் 15 லட்சத்துக்கும் அதிகமான தீபங்களை ஏற்றுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரமாண்ட தீபோற்சவ நிகழ்ச்சியை நாளை மாலை தொடங்கி வைக்கிறார். 

அயோத்தியில் சாமி தரிசனம் செய்யும் அவர், ராம பிரானுக்கு சிறப்பு பூஜைகளும் செய்கிறார். பிறகு ராமர் கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.

அதன் பின்னர் சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி வழிபாட்டிலும் அவர் கலந்துக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் 11 ராம்லீலா அலங்கார ஊர்திகள், அனிமேஷன் ஊர்திகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. 

மேலும், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அயோத்தி தீபோற்சவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayodhya ramar temple deepotsav function


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->