இந்திய எல்லையில் நிகழ்ந்த அசம்பாவிதம்! ஆபத்தில் சிக்கிய ராணுவ வீரர்கள்! மீட்பு படை விரைவு!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானை ஒட்டிய இந்தியாவின் எல்லைப் பகுதியில் மிக உயரமான பகுதியான சியாச்சினில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் 8 பேர் பனிச்சரிவில் சிக்கி உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சியாச்சின் மலைப்பகுதியில் 8 பேர் கொண்ட ராணுவ வீரர்கள் குழுவானது பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, இன்று மாலை அங்கு 3 30 மணி அளவில் பனிச் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பனிச்சரிவில் ராணுவ வீரர்களும் சிக்கி உள்ளார்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

சியாச்சின் மலைப்பகுதியின் வடக்குப் பகுதியில் இந்த பனிச்சரிவானது ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் எட்டு பேரையும் மீட்பதற்காக மீட்புக்குழு விரைந்து சென்று உள்ளது மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. 18000 அடி உயரம் கொண்ட இடத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுளள்து. ராணுவ வீரர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத நிலையில் பதற்றம் நீடிக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Avalanche hits Army positions in the Siachen Glacier


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->