கோவிலில் தாலிகட்டி, அரங்கேறிய விபரீதம்.! ஆத்தூர் அருகே பெற்றோரை பதறவைத்த காதல்ஜோடி.!   - Seithipunal
Seithipunal


இளம்ஜோடிகள் ஒரே சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது கள்ளக்குறிச்சி மற்றும் சேலம்.மாவட்டங்களில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள ராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாஸ்குமார் என்ற 19 வயது இளைஞர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 19வயதான கவிதா என்ற பெண் ஆகிய இருவரும் ஆத்துக்காட்டு கோட்டை அரசினர் கல்லூரியில் பி.ஏ படித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், ஆனாலும், நண்பர்களாக பழகிவந்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமலிருந்தது. 

ஆனால் நாளடைவில் அவர்கள் நட்பு காதலாக மாறியபோதுதான் பெற்றோர்களின் ரூபத்தில் பெரிய பிரச்சனை வந்தது. இதனால் மனமுடந்த காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி கள்ளக்குறிச்சி அருகேயுள்ள ஏரியூர் அருஞ்சோலை அம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். 

அதன் பின் இருவரும் கோவில் முன்பாகவே ஒரே சேலையில் தூக்கிப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து கீழ்க்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attur couples suicide infront of temple 


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal