ரேட்டு ஏறிகிட்டே போகுது.. அரசியல் விளையாட்டை நிறுத்துங்கள் - அசோக் கெஹ்லோட் பரபரப்பு பேச்சு.!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிளவு காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டனர். இதனால்,  ராஜஸ்தான் மாநில சபாநாயகர் கடந்த ஜூலை 14ம்தேதி தகுதிநீக்க நோட்டீசை, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அனுப்பினார். 

இதைத்தொடர்ந்து, தகுதிநீக்க நோட்டீசை ரத்து செய்யக்கோரி சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வருகிற ஜூலை 24ஆம் தேதி வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. 

சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தற்போது சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும், சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிரான வழக்கில், சச்சின் பைலட் கோரிக்கையை ஏற்று மத்திய அரசையும் ஒரு மனுதாரராக சேர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராஜஸ்தான் அரசியலில் பல சர்ச்சைகள் அடுத்தடுத்து எழுந்து வரும் நிலையில், எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் இழுக்க குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து இந்த பேரத்தொகை அதிகரித்து வருவதாகவும், அரசியல் பொழுதுபோக்கு விளையாட்டை மோடி நிறுத்த வேண்டும் என்றும் அசோக் கெஹ்லோட் கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ashok Gehlot request to Modi Under play about Rajasthan Politics


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->