மாநில அரசு சார்பில் இ-ஸ்கூட்டர் சேவை... முதலமைச்சரின் சூப்பர் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


டெல்லி முழுவதும் அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "மெட்ரோ ரயில் நிலையங்களோ பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் சேவை திட்டம் முதலில் தொடங்கப்பட உள்ளது.

அதன் தொடர்ச்சியாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும். டெல்லி அரசால் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தில் தானியங்கி இ-ஸ்கூட்டர்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீட்டர் வரை செல்லும்.

டெல்லி அரசு பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி அதிக பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது இந்த புதிய வசதி மூலம் தொலைதூர இலக்கை அடைவதில் இருக்கும் சிக்கலையும் தீர்க்க முடிவு செய்துள்ளோம்" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aravind kejriwal announced Escooter service on behalf of Delhi govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->