எந்த அரசியல் கட்சியிலும் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதில்லை -அஜய் மக்கான் - Seithipunal
Seithipunal


டெல்லியில் அடுத்த மாதம் 17ந் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய் மக்கன் ஜெய்ப்பூரில் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது,

கட்சியின் பாரம்பரிய விதிகளின்படியே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறும். எந்த அரசியல் கட்சியிலும் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுவதில்லை. பாஜகவில் தேர்தல் மூலம் தலைவராக ஜே.பி.நட்டாவோ, அமித் ஷாவோ தேர்வு செய்யப்பட்டதாக யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா?.

இந்த கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், பாஜக பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தி மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது என்று அவர் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

any political party choose the leader no election


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->