14 வயது சிறுமியை மிரட்டி சீரழித்து, 4 மாத கர்பிணியாக்கிய யூ டியூபர்... வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியை சார்ந்த 14 வயது சிறுமி, டிக் டாக் செயலிக்கு அடிமையாக இருந்த நிலையில், இந்த டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்ததன் மூலமாக சிறுமிக்கு பன் பக்கெட் (Fun Bucket) யூ டியூப் சேனல் ஷிப்பாடு பார்கவ் (Chippada Bhargav) என்ற நபர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த ஷிப் பாடு பார்கவ் விடியோக்கள் ஊரடங்கு காலத்தில் தமிழகத்திலும் பிரபலமானதாக கூறப்படுகிறது.

முதலில் நல்லவன் போல காமுகன் ஷிப் பாடு பழகி வந்த நிலையில், அவனின் பேச்சில் மயங்கிய சிறுமி அவ்வப்போது டிக் டாக் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்நிலையில், காமுகன் பின்னாளில் சிறுமியை காதலிப்பதாக கூறிய நிலையில், இதனை சிறுமி ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த காமுகன் ஷிப்பாடு பார்கவ், சிறுமியிடம் இருந்து இலாவகமாக வாங்கிய விடீயோக்களை மாபிங் செய்து இணையத்தில் பதிவு செய்வேன் என்றும், உன்னை அவதூறான பெண்ணாக சித்தரித்து இணையத்தில் பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளான். 

இவனது மிரட்டலுக்கு பயந்துபோன சிறுமி செய்வதறியாது திகைக்கவே, சிறுமியை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனை வைத்தே சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவர் 4 மாத கர்ப்பிணி ஆகியுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை கண்டுகொண்ட பெற்றோர்கள், சிறுமியிடம் விசாரிக்க தனக்கு நடந்த கொடூரத்தை சிறுமி கண்ணீருடன் விவரித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்கூறிய பதைபதைப்பு தகவல் மற்றும் காமுகன் ஷிப்பாடு பார்கவின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காமுகனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். 

மேலும், தமிழகத்திலும் இதுபோல நல்லவன் போல வெளியே காண்பித்துக்கொள்ளும் பல போலி யூ டியூப் நபர்கள், பல்வேறு பெண்களை சீரழித்துள்ளதாகவும் பேச்சுவழக்கு தகவல் வெளியாகி வரும் நிலையில், அவை குறித்த உண்மை எப்போது வெளியாகும் என்பது தான் காலத்தின் சாபக்கேடாக இருக்கிறது. பிராங்க் என்ற பெயரில் சாலையில் செல்லும் பெண்களை குறிவைத்து அத்துமீறுவது போல காட்சிப்படுத்தப்பட்ட பதிவுகள், உண்மை சம்பவங்கள் போல சித்தரித்து சமூக சீர்கேடுக்கு ஊக்குவிக்கும் செயலும் அரங்கேறி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andra Pradesh Visakhapatnam Funn Bucket YouTube Channel Chippada Bhargav Arrest Child Sexual Abuse Case


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->