எதிர்காலத்திற்கு குறைந்தபட்ச படிப்பே முடியல... தாலிகட்டியாச்சு.. பள்ளியில் காதல்.. வயது செய்யும் சேட்டைகள்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி ராஜமுந்திரியில் அரசு ஜூனியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயின்று வந்த மாணவ - மாணவி ஜோடி திருமணம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவர், தன்னுடன் கொண்டு வந்த 17 வயது மாணவியை காதலித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக காதல் ஜோடிகள் சந்திக்க இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது பள்ளிகள் மீண்டும் திறந்ததால் காதல் ஜோடி நேரில் சந்தித்துள்ளது. 

தங்களுக்குள் அன்பை பரிமாறிக்கொண்ட நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக வகுப்பறையில் வைத்து மாணவன் - மாணவிக்கு மஞ்சள் தாலி கட்டியுள்ளார். சம்பவத்தின் போது உடன் இருந்த மாணவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடவே, இந்த பள்ளிக்கூட திருமண நிகழ்ச்சி தெரியவந்துள்ளது. 

இது இந்த வீடியோ அப்பகுதியில் பெரும் வைரலாகி, கல்லூரியின் முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் பள்ளியை விட்டு நீக்கிய நிலையில், வீடியோ எடுத்து பள்ளிக்கூட திருமணத்தை ஊரறிய வைத்த மாணவரையும் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் 18 வயது ஆகாத நிலையில், இந்த திருமணம் செல்லாது என்ற காரணத்தால் பெண் வீட்டார் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. மேலும், பள்ளிக்கூடத்திற்கு சென்று பாடங்களை படிக்காமல், காதல் வலையில் விழுந்து திருமணம் செய்து, தெருவில் இருக்கும் சோகத்திற்கு இருவரும் தள்ளப்பட்டுள்ளனர். படிக்கும் வயதில் காதல் என்ற வலையில் விழுந்தால், எதிர்கால வாழ்க்கை தள்ளாடும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andra Pradesh Godavari School Students Love Marriage


கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா வருகை அதிமுக-வை பாதிக்குமா?!
Seithipunal