ஆந்திரா : 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தில் உள்ள அம்பாவரம் கிராமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பையில் ஒரு சிறுமியின் பிணம், கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து, அந்த சிறுமியின் உடல் மீட்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இந்த நிலையில், இந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் படி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்த சிறுமியின் நெருங்கிய உறவினரான டி.சித்தையா என்ற வாலிபர் சிறுமியை கற்பழித்து கொன்றது தெரியவந்தது. 

இவர் சிறுமிக்கு பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று, பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, சிறுமி கூச்சலிட்டதால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அங்குள்ள கட்டில் சட்டத்தால் சிறுமியின் தலையில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

அதன் பின்னர், போலீசார் சித்தையாவை கைது செய்து, ஆந்திராவின் பிரகாசம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சோமேசகர், குற்றம் சுமத்தப்பட்ட சித்தையாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhira court order to man death penalty for girl kill case


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal