அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் 4 பேர் மீது இனவெறி தாக்குதல்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இந்திய பெண்கள்4 பேர் மீது அமெரிக்க பெண் இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்கவாழ் இந்திய பெண்கள் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண் இந்தியபெண்களை ஆத்திரத்துடன் திட்டி வாக்குவாதம் செய்யத்தொடங்கினார். இந்திய பெண்களைப் பார்த்து அந்த அமெரிக்கப்பெண், நீங்கள் இந்தியாவுக்கே திரும்பிபோங்கள். எங்குபார்த்தாலும் இந்தியர்கள் தான் இங்கு இருக்கிறீர்கள்.

இந்தியாவில் நன்றாக வாழ முடியும் என்ற போது இங்கே ஏன் வருகிறீர்கள். நான் இந்தியர்களை வெறுக்கிறேன் என்று கூச்சலிட்டு திட்டியுள்ளார். மேலும், ஒரு இந்திய பெண்களை அந்த அமெரிக்க பெண் தாக்கவும் செய்துள்ளார்.

இதை ஒரு பெண் வீடியோ எடுத்துள்ளார். மற்றொரு பெண் காவல்துறைக்கு அழைப்பு விடுத்து தகவல் தெரிவித்தார். இதைகேட்ட அந்தபெண், நான் மெக்சிகன். ஆனால் அமெரிக்காவில் பிறந்தவள் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அமெரிக்க போலீசார் தாக்குதல் நடத்தி மிரட்டிய பெண்ணை கைது செய்தனர். காவல்துறை விசாரணையில், அவரது பெயர் எஸ்மெரால்டா என்பது தெரியவந்தது. அந்த பெண் மீது பல்வேறு பிரிவுகளின் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American women attack Indian women's in America


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->