மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்.! உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசதில் மருத்துவமனை ஒன்றில் நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திர பிரதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஊசி போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து சுகாதாரத்துறை இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது. 

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் திவாகர் சிங் தெரிவித்ததாவது, வீடியோவில், மாவட்ட மருத்துவமனையின் அவசர மருத்துவ அறையில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒரு நோயாளிக்கு ஊசி போடுவதைக் காணலாம் என்றும், இந்த சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அறிந்ததும் அவசர மருத்துவ அறைக்கு பொறுப்பான மருத்துவ அதிகாரி, டாக்டர் மற்றும் அங்கு நியமிக்கப்பட்டுள்ள மற்ற மருத்துவ பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துருவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambulance driver injecting patients at hospital in uttarpradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->