ஆம்புலன்சில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுநர் - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த்நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி பெண் ஒருவர் உடல்நலம் சரியில்லாத தன் கணவரை அருகில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், கட்டணம் செலுத்த வசதியில்லாததால் அந்த பெண் தனது கணவரை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உதவியாளருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், கத்தி கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதனால், கோபமடைந்த அவர்கள் அந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சப்ளையை துண்டித்துவிட்டு, இருவரையும் ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர். உடனே அந்த பெண் தனது சகோதரரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். 

அவர் சம்பவம் குறித்து போலீசுக்கு தெரிவித்துள்ளார். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று பெண்ணின் கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ambulance driver harassment to women in uttar pradesh


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->