Amazon Now சேவை; சில நிமிடங்களிலேயே உங்கள் கைகள் தேடிவரும் டெலிவரி பொருட்கள்; அமேசான் நிறுவனம் சூப்பர் அப்டேட்..! - Seithipunal
Seithipunal


Instamart, Zepto, Blinkit போன்று வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை சில நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை Amazon Now வழங்கி வருகிறது. இந்த சேவையானது தற்போது டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. 

தொடர்ந்து சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களுக்கும் இந்த சேவையை விரிவாக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், அகமதாபாத், கொச்சி, மைசூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி Amazon Now மூலம் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மளிகைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், மின்னணு சாதனங்களை குறைந்த நேரத்தில் பெற முடியும்.

இதற்காக அமேசான் நிறுவனம், 02 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. அத்துடன், பல்வேறு பகுதிகளில் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amazon plans to offer expedited delivery through its Amazon Now service


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->