உத்தரவு! ஜனாதிபதி முர்மு எழுப்பிய கேள்விகளுக்கு அனைத்து மாநிலமும் பதிலளிக்க வேண்டும்! - உச்ச நீதிமன்றம்
All states must respond questions raised by President Murmu Supreme Court
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போடப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் "ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

ஜனாதிபதி 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்" எனத் தெரிவித்திருந்தார்.இதில் முதன்முறையாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தது.
மேலும், ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு முடிவெடுக்க காலக்கெடு விதித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதிக்கு திரவுபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அது இன்று விசாரணைக்கு வந்தது.இதுகுறித்து வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து, இந்த வழக்கை வரும் 29ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
English Summary
All states must respond questions raised by President Murmu Supreme Court