'வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களுக்கு காரணம் மோசமான நிர்வாகம்'; அஜித் தோவல்..! 
                                    
                                    
                                   Ajit Doval says the reason for the regime changes in Bangladesh and Nepal is poor governance
 
                                 
                               
                                
                                      
                                            டில்லியில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுதான், சர்தார் வல்லபாய் படேல் பற்றிய 06-வது சொற் பொழிவை நிகழ்த்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றும், 150 வது ஆண்டு நிறைவு, மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் பேசியுள்ளார்.

அத்துடன், வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, பொருளாதார தோல்விகள், உணவு, தண்ணீர் பற்றாக்குறை, பணவீக்கம், அடக்குமுறை வரிகள் மற்றும் சமூக நலன்கள் ஆகியவை ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகின்றன என்று சுட்டிக்காட்டியுளளார்.
மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பிலிருந்து நிர்வாகம் தொடங்க வேண்டும் எனவும், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வு வழங்கப்பட வேண்டும். என்றும் அதுதான் ஒரு அரசின் முதல் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சவால்களுக்கு ஏற்ப, சர்தார் வல்லபாய் படேலின் தேசத்தைக் கட்டியெழுப்பும் நெறிமுறைகளிலிருந்து இந்தியா உத்வேகம் பெற வேண்டும் என்றும்,  படேல் தனது வாழ்நாள் முழுவதும் தேச வளர்ச்சிக்காக உழைத்தது போல் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அஜித் தோவல் வலியுறுத்தியுள்ளார்.
 மேலும், செயற்கை நுண்ணறிவு போர்கள் நடத்தப்படும் விதத்தை மாற்றும் என்றும், இது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் பேசியுள்ளார். அத்துடன், நாட்டில் பயங்கரவாதம் திறம்பட முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து மக்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் சமூக இலக்கு மட்டுமல்ல, நிர்வாகத்தின் கட்டாயமும் ஆகும் என்றும், நல்ல நிர்வாகத்திற்கு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது அவசியம என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மணிப்பூர் நெருக்கடியை ஒரு கிளர்ச்சியாகப் பார்க்கக்கூடாது என்றும், பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களை நாம் எதிர் கொள்ளும் போது, தக்க பதிலடி கொடுக்க முடியும் என்பதைக் காட்ட நாம் வலிமையைக் காட்ட வேண்டும் என்றும் அஜித் தோவல் குறிப்பிட்டுள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Ajit Doval says the reason for the regime changes in Bangladesh and Nepal is poor governance