மீண்டும் பெங்களூருவுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! அச்சத்தில் பொதுமக்கள்.!
again bomb threat to banglore
கடந்த ஒன்றாம் தேதி பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து சிதறியது. இதில், ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர் உள்பட பத்து பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பை போன்று பெங்களூருவில் ரெயில், பேருந்து நிலையங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், போலீஸ் அமைச்சர் பரமேஸ்வர் மற்றும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும் 2.5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் இல்லையெனில் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த மின்னஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்துள்ள நிலையில், தற்போது மர்மநபர்கள் பெங்களூரு நகருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெங்களூரு நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
again bomb threat to banglore