ஜார்க்கண்டில் ஒரு காட்டுயானையின் அட்டூழியத்தால் பறிபோன 23 அப்பாவி உயிர்கள்; தமிழ்நாட்டில் இருந்து 06 கும்கிகளை வரவழைக்க முடிவு..! - Seithipunal
Seithipunal


ஜார்க்​கண்​டி மாநிலம் வனப்​பிரதேசம் அதிகம் நிறைந்தது. இதன் காரணமாக அங்கு யானை​கள் நடமாட்​டம் அதி​கம் உள்​ளன, அம்மாநிலத்தில்,மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் ஒரு முரட்டு காட்டுயானை தாக்கியதில்கடந்த 02 வாரங்​களில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவ​காரம் குறித்து நேற்று ஜார்க்​கண்ட் சட்​டப்​பேர​வை​யில் காங்​கிரஸ் எம்​எல்ஏ ராமேஸ்​வர் ஓரான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, யானை​களின் அச்​சுறுத்​தலை சமாளிக்க அரசு கொள்​கை​யில் மாற்​றம் கொண்டு வர வேண்​டும் என்றும், யானை மற்​றும் மனித மோதலைக் குறைக்க பயனுள்ள நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், காட்டு யானை​யால் ஏற்​படும் உயி​ரிழப்​புக்கு ரூ.04 லட்​சம் வழங்​கப்​படு​கிறது. இதை, ஒடிசா போன்று ரூ.06 லட்​ச​மாக உயர்த்த வேண்​டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அம்மாநில முதல்​வர் ஹேமந்த் சோரன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:

ஜார்க்​கண்​டில் யானை - மனித மோதல் கடுமை​யான சமூக மற்​றும் சுற்​றுச்​சூழல் நெருக்​கடி​யாக மாறி​யுள்​ளதாகவும், யானை நடத்​தை​யில் ஏற்​படும் மாற்​றத்​துக்கு சுற்​றுச்​சூழல் மாற்​றங்​கள் ஒரு முக்​கிய காரண​மாக உள்​ளது. அரசு முழு பிரச்​சினையை​யும் கவனித்து வரு​கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாநிலத்​தில் காட்டு யானையை கட்டுப்படுத்தும் அளவில், பயிற்சி பெற்ற மீட்​புக் குழு தற்​போது இல்​லை என்றும், இந்​தக் குறை விரை​வில் தீர்க்​கப்​படும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதற்காக தமிழ்​நாட்​டில் இருந்து 06 கும்கி யானை​கள் அழைத்து வர உள்ளதாகவும், இவை முரட்டு காட்டு யானை​களை கட்​டுப்​படுத்​த பயன்​படுத்​தப்​படும்​ என்று முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After 23 people were killed by a wild elephant in Jharkhand it was decided to bring in Kumkis from Tamil Nadu


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->