பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை நாங்கள் ஏற்கிறோம்.. கௌதம் அதானி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதை சம்பவத்தில் பெங்களூர்ல இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தற்பொழுது வரை 275 பேர் பலியாகி உள்ளதாக ஒடிசா மாநில முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவு அதானி குழுமம் ஏற்றுக் கொள்ளும் என கௌதம் அதானி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரிசா ரயில் விபத்தால் நாம் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி குழந்தைகளின் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பலத்தை வழங்குவதும், குழந்தைகளுக்கு சிறந்த நாளை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adani group bear education expenses of children who have lost their parents


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->