அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் நடிகர் பிரகாஷ் ராஜ்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் சூதாட்ட செயலிகள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில், அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, குறிப்பிட்ட சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் திரைப் பிரபலங்கள் நடித்திருப்பது தெரியவந்தது. 

அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகர்களின் விளம்பரங்களை நம்பி, சூதாட்ட செயலிகளைப் பயன்படுத்தி ஒருவர் 3 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாக புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அமலாக்கத்துறையினர் பிரபல நடிகர்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. 

மேலும், இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஆஜரானார். இதேபோல் அமலாக்கத்துறை ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கும் சம்மன் அனுப்பியிருந்தது. 

விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், மஞ்சு லட்சுமி ஆகஸ்ட் 13 ஆம் தேதியும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், ராணா டகுபதி ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்டதால் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor prakashraj appeared enforcement department


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->