நடிகர் கவுண்டமணியின் நில விவகாரம்: மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கவுண்டமணி கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி என்பவருக்கு சொந்தமான ஐந்து கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். 

இதில் 22 ஆயிரத்து 700 சதுர அடி பரப்பில் வணிக வளாகத்தை 15 மாதத்தில் கட்டி முடித்து ஒப்படைக்கும் படி நடிகர் கவுண்டமணி பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொண்டார். 

இந்த பணிக்காக சுமார் ரூ. 3.58 கோடி ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் 2003 ஆம் ஆண்டு வரையிலும் எந்த ஒரு கட்டுமான பணியும் தொடங்காததால் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் கவுண்டமணி மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். அதன்படி நேரில் சென்று ஆய்வு செய்தபோது ரூ. 46.51 லட்சத்திற்கு மட்டுமே பணி நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து 5 கிரவுண்ட் நிலத்தை நடிகர் கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2008 ஆம் ஆண்டு நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கட்டுமான நிறுவமான ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன், கடந்த 2021 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து நடிகர் கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Kaundamani land issue Supreme Court dismissed appeal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->