வீட்டை மருத்துவமனையாக மாற்றும் கமல்ஹாசன்! மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸின் பரவலானது வேகமாக இருப்பதை அடுத்து கடுமையான உத்தரவுகள் மூலம் பரவலை தடுப்பதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே அனைவருக்கும் மருத்துவம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. போதுமான வசதி இல்லை என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தன்னுடைய வீடாக இருக்கும் கட்டிடத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றி,  மக்கள் நீதி மையத்தில் இருக்கும் மருத்துவரை கொண்டு மருத்துவமனையாக  செயல்படுத்தி மக்களுக்கு உதவ நினைக்கிறேன். இதற்கு அரசு அனுமதி கிடைத்தால் தயாராக காத்திருக்கிறேன் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்..

அவர் டுவிட்டரில், "இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamal said he is ready to serve people


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal