7 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை ரத்து!
Aadhaar Card
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை, வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது.
இதற்கிடையில், 7 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளது. முன்பு இதற்காக 125 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், இனி எந்தக் கட்டணமும் இல்லை.
இந்தத் தீர்மானம் கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஆதார் அமைப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 6 கோடி குழந்தைகள் நேரடியாகப் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.