ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காரில் சிக்கி தொண்டர் பலி: இணையத்தில் வைரலான வீடியோவால் அதிர்ச்சி..!
A video of a volunteer getting stuck in a car in which Jagan Mohan Reddy was travelling has gone viral on the internet
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் காரில் சிக்கி தொண்டர் பலியான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி சட்டெனப்பள்ளி தொகுதியில் உள்ள ரென்டபல்லாவிற்கு கடந்த 19-ஆம் தேதி சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
ரென்டபல்லா செல்லும் போது எட்டுகுரு பைபாஸ் சாலை அருகே ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய் வாகனம் சிங்கையா (62) என்பவர் மீது ஏறியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது அதனை யாரும் கண்டுகொள்ளாமல் சிங்கையா உடலை சாலையோரம் இழுத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கான்வாய் வாகனத்தில் எந்த கார் சிங்கையா மீது மோதியது என்று தெரியாமல் இருந்துள்ளது.

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காரின் முன்பக்க சக்கரத்தில் சிங்கையா சிக்கி இறந்ததும் தெரியவந்துள்ளது. அதாவது, ஜெகன் மோகன் அந்த காரில் நின்று கொண்டு கை அசைப்பதும், கார் மீது தொண்டர் ஒருவர்ஏறி நின்று நடனமாடியபடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி சென்ற கார், பதிவு எண்ணை கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி, காரை ஓட்டி வந்த டிரைவர் ரமண ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த வழக்கில் கூடுதலாக ஜெகன் மோகன் ரெட்டி, கார் உரிமையாளர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. குறித்த காரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மூலம் ஜெகன் மோகன் முதல்வராக இருந்தபோது சிறப்பு அதிகாரியாக இருந்த கிருஷ்ணமோகன் ரெட்டி பெயரில் வாங்கியது தெரிய வந்துள்ளது.
English Summary
A video of a volunteer getting stuck in a car in which Jagan Mohan Reddy was travelling has gone viral on the internet