பத்மபூஷண் விருது பெற்ற சென்னை ஐ.ஐ.டி. விஞ்ஞானியை டிஜிட்டல் கைது செய்து ரூ.57 லட்சம் அபேஸ் செய்த கும்பல்..!
A scientist who received the Padma Bhushan award was defrauded of Rs57 lakhs through a scam involving a digital arrest
சென்னை ஐ.ஐ.டி.,யின் முன்னாள் விஞ்ஞானியும், பத்மபூஷண் விருது பெற்ற ஓய்வு பெற்ற, 77 வயது பேராசிரியர் ஒருவரிடம், கடந்த செப்டம்பரில் தொடர்பு கொண்ட மோசடி கும்பல் ஒன்று தங்களை சி.பி.ஐ., அதிகாரிகள் என்று கூறி மோசடி செய்துள்ளனர்.
குறித்த விஞ்ஞானியின் மொபைல் எண், வட மாநிலத்தில் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உங்களை, ‛டிஜிட்டல் கைது' செய்துள்ளோம். நீங்கள் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடாது மற்றும் உங்களது வங்கி ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டு, அவரது வங்கி கணக்கு விபரங்களை கேட்டுப் பெற்றுள்ளனர்.
மூன்று மணி நேரத்திற்கு மேலாக அவரை டிஜிட்டல் கைதில் வைத்திருப்பதாகக் கூறிய மோசடி கும்பல் அவரது வங்கி கணக்கில் இருந்து, 57 லட்சம் ரூபாயை எடுத்துள்ளனர். அத்துடன், வங்கி கணக்கை ஆராய்ந்த பின், அந்த பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுவோம் எனக்கூறி, அழைப்பை துண்டித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஞ்ஞானி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் அவரது மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புகள் அடிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த வழக்கில் சைபர் குற்றவாளிகள் குறித்த, எவ்வித துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது வடமாநில காவல் துறையிடம், இதேபாணி குற்றவாளிகள் தொடர்பான விபரங்களை கேட்டு, அவர்களை கைது செய்ய, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
English Summary
A scientist who received the Padma Bhushan award was defrauded of Rs57 lakhs through a scam involving a digital arrest