யாருடன் கூட்டணி...? நாள் குறித்த தேமுதிக... அழைப்பு விடுத்த பிரேமலதா விஜயகாந்த்!
DMDK election 2026 Premalatha Vijayakanth ADMK DMK TVK
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் விதமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வருகிற 2026 ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டிற்கு வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அழைப்பு வீடியோ:
அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், மகளிர் அணி சகோதரிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள அழைப்பில், தலைவரைக் குறிக்கும் விதமாகக் கீழ்வருமாறு பேசியுள்ளார்:
“தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொண்டர்களுக்கும் என் வணக்கங்கள். வருகிற ஜனவரி 9, 2026 அன்று கடலூர் பாசார் கிராமத்தில் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' நடக்க இருக்கிறது.”
வெற்றி இலக்கு:
இந்த மாநாட்டை "மிகப் பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்துத் தர வேண்டும்" என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்ட பிரேமலதா, "அந்த வெற்றி உங்களுக்கான வெற்றி என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தவறாமல் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார். இறுதியாக, "நல்லவர்கள் லட்சியம் வெல்வது நிச்சயம்" என்ற கட்சியின் முழக்கத்தையும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இந்த மாநாடு, தேமுதிகவின் அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
DMDK election 2026 Premalatha Vijayakanth ADMK DMK TVK