என்னை முடக்கினால் திருச்சியை கை பற்றலாம் என்று நினைக்கிறார்கள் - திமுக அமைச்சர் கே.என். நேரு!
DMK minister kn nehru BJP ED Case trichy
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியிலுள்ள உறையூர் பெருமாள் கோவில் பகுதியில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு, தன் மீதான மத்திய அரசின் நடவடிக்கை குறித்துப் பேசினார்.
அரசின் சாதனைகள்:
கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, "திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில் விடுபட்ட பணிகளையும் சேர்த்து, இந்த நான்கரை ஆண்டு காலங்களில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். குறிப்பாக, நம்முடைய ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் உறுதி செய்திருக்கிறார்" என்று பாராட்டினார்.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு:
சமீபத்தில், நகராட்சி நிர்வாகத் துறைப் பணி நியமனங்களில் ரூ. 1,020 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறி, அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறை பரிந்துரைத்த விவகாரம் குறித்து அவர் பேசினார்.
"மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்துள்ளது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் திமுகவை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்யப்போவதும் இல்லை" என்று உறுதியளித்தார்.
மேலும், "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என்றும், இந்தப் பிரச்சினையைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
DMK minister kn nehru BJP ED Case trichy