பீஹார் தேர்தல்: ரூ.2.7 கோடி கொடுக்கவில்லை என்பதால் எம்எல்ஏ சீட் தர மறுப்பு: லாலு வீடு முன் புரண்டு அழுத பிரமுகர்..! - Seithipunal
Seithipunal


பீஹார் சட்டசபை தேர்தல் வரும் நவம்பர் மாதம் 06 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதனால் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன. அதே நேரத்தில் எம்எல்ஏ சீட் கிடைக்காத பலரும் தத்தம் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் லாலு கட்சியில் எம்எல்ஏ சீட் வேண்டும் என்றால் ரூ.2.7 கோடி கேட்டதாகவும், அதை தராததால் வேறு ஒருவருக்கு எம்எல்ஏ சீட் தரப்பட்டதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் மதன் ஷா என்பவர், லாலு பிரசாத் வீட்டின் முன்பு திரண்டு சட்டையை கிழித்து அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், தரையில் விழுந்து அழுது புரண்டு கதறியுள்ளார். அத்துடன், அங்கு அழுதபடியே பேசிய அவர், 'தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் நான் சீட் கேட்டேன். உங்களுக்கு சீட் தருவோம் என்று உறுதி அளித்தனர்.

அதன் பின்னர் சீட்டுக்காக ரூ.2.7 கோடி தர வேண்டும் என்றனர். இந்த பணத்தை கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் யாதவ் (தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தள ராஜ்யசபா எம்பியாக உள்ளார்) கேட்டார். நான் பணம் தர மறுத்தேன். இப்போது அந்த தொகுதியை வேறு ஒருவருக்கு கொடுத்து இருக்கின்றனர் என்று கதறியுள்ளார்.

அத்துடன், தான் கட்சிக்காக 1990-ஆம் ஆண்டில் இருந்து கடுமையாக உழைத்திருக்கிறதாகவும், கட்சிக்காக தன் நிலத்தை கூட விற்றிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ள அவர், இப்போது எம்எல்ஏ சீட்டை பணத்திற்காக விற்றுள்ளனர் என்று குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், என்னை போன்ற கடும் உழைப்பாளிகளை கட்சி ஒதுக்கிவிட்டு, வசதியானவர்களை முன்னிறுத்துகின்றனர் என்றும்  அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று மதன் ஷா கூறியுள்ளார்.

அத்தோடு, சீட் கிடைக்காமல் ஏமாற்றியதாக கட்சி தலைமை மீது புகார் கூறி அழுத மதன் ஷாவை, அங்கிருந்த ஆர்ஜேடி தொண்டர்கள் அகற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A prominent figure broke down in tears in front of Lalus house after he refused to give him an MLA seat because he did not pay money in the Bihar elections


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->