புர்கா அணிந்து காதலியை சந்திக்க சென்ற நபர்! தர்ம அடி கொடுத்த மக்கள்!
A person wearing a burqa went to meet his girlfriend The people who gave the Dharma blow
புர்கா அணிந்து காதலியை பார்ப்பதற்காக சென்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலியை சந்திப்பதற்காக புர்கா அணிந்து இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அவரை விசாரித்தனர். பின் அவரை முழுமையாக சோதனை செய்த போது அவர் ஆண் என தெரியவந்தது.
அப்பகுதி மக்கள் அவரை சரமாரியாக தாக்கினார். மேலும், அவரிடம் இருந்து ஒரு துப்பாக்கியும் கிடைத்துள்ளது, இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் இளைஞர் கட்டிடத்தில் இருந்து வெளியே வருவதையும் மக்கள் அவரை பிடித்து விசாரணைக்காக நிறுத்துவதையும் காட்டுகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், அந்த கூட்டத்திலிருந்து இளைஞரை மீட்டு சிறையில் அடைத்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
A person wearing a burqa went to meet his girlfriend The people who gave the Dharma blow