இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல்; 09 பேர் கைது..!
A Pakistani fishing boat with 9 people on board was seized after entering Indian territory
சர்வதேச கடலோர எல்லைப் பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், அந்த படகில் இருந்து 09 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு, குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு கொண்டு சொல்லப்படுவதாக கூறப்பட்டுள்ளது. நேற்று கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் அரேபிய கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்து போது குறித்த பாகிஸ்தானின் மீன்பிடி படகு இந்திய எல்லைக்குள் தென்பட்டதை கடலோர காவல்படை கண்டனர். இதனைத் தொடர்ந்து படகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரோந்து கப்பலை கண்டதும் குறித்த பாகிஸ்தான் படகு, பாகிஸ்தான் எல்லைக்குள் செல்ல முயன்றுள்ளனர். இருப்பினும்,கடலோர காவல்படையினர் அந்த படகை இடைமறித்து, படகில் ஏறி பறிமுதல் செய்துள்ளதோடு, படகில் இருந்த 09 பேரையும் கைது செய்துள்ளனர்.
English Summary
A Pakistani fishing boat with 9 people on board was seized after entering Indian territory