அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நுழைந்து தொழுகை நடத்த முயன்ற காஷ்மீர் நபர்; தீவிர விசாரணை நடத்தும் போலீசார்..!
A commotion was caused by a man from Kashmir who attempted to enter the Ayodhya Ram temple complex and offer prayers
அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்திற்குள் காஷ்மீரைச் சேர்ந்த இஸ்லாமியரான அகமது ஷேக் என்பவர் தொழுகை நடத்த முயன்ற நிலையில், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் விசாரணையில் அவர், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அகமது ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 55 வயதான இந்த நபர், உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள, கோயில் வளாகத்திற்குள் நேற்றைய தினம் நுழைந்து, கோயிலுக்குச் சென்றுள்ளதோடு, சீதா ரசோய் பகுதிக்கு அருகில் அமர்ந்து, அங்கு தொழுகை நடத்தத் தயாரானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கோயில் பணியாளர்களால் அவர் கைது செய்யப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, அவர் கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ள போலீசார் மருத்துமனை உதவியை நாடியுள்ளனர். எனினும், அவர் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும் அவர் அயோத்தி ராமர் கோயிலுக்குள் நுழைந்ததற்கான காரணங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சபவத்தில், வேறு யாரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா எனபதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, அடுத்த வாரம் அயோத்தியில் மகர சங்கராந்தி கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளது. வரும், ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயிலின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோவில் வளாகத்தில் இஸ்லாமியர் நுழைந்து தொழுகை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, கோயில் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
A commotion was caused by a man from Kashmir who attempted to enter the Ayodhya Ram temple complex and offer prayers