அந்தரத்தில் தொங்கிய குழந்தை... அதிர்ச்சி காட்சிகள்!
A child hanging in the air shocking scenes
3-வது மாடி ஜன்னலில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த குழந்தையை தீயணைப்பு படை வீரர் லாவகமாக மீட்டார்.இந்த சம்பவம் புனே கோப்டேநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மராட்டிய மாநிலம் புனே, கோப்டேநகர் பகுதியில் உள்ள சோனவானே அடுக்குமாடி குடியிருப்பில், 3-வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர், நேற்று காலை தனது மூத்த மகளை பள்ளியில் விடச்சென்று சென்றிருந்தார். அதன்போது 4 வயது பாவிகா என்ற தனது இளைய மகள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
திடீரென எழுந்த சிறுமி, ஜன்னல் வழியாக வெளியே செல்ல முயன்றபோது, தலையுடன் ஜன்னல் கம்பிகளுக்கு சிக்கி, உடல் பகுதி 3-வது மாடியில் அந்தரத்தில் தொங்கும் நிலைக்குச் சென்றது.
இதை பார்த்த ஒரு குடியிருப்புவாசி அதிர்ச்சி அடைந்து, அதே கட்டிடத்தில் வசிக்கும் தீயணைப்பு படை வீரர் யோகேஷ் அர்ஜூன் சவான் என்பவரிடம் உடனடியாக தகவல் தெரிவித்தார். அவர் பீறிட்டோடி 3-வது மாடிக்கு சென்று குழந்தையை மீட்க முயன்றார். அந்நேரத்தில் சிறுமியின் தாயும் வீடு திரும்பி, வீட்டை திறந்து உள்ளே ஓடினார்.
வீட்டிற்குள் நுழைந்த யோகேஷ் சவான், ஜன்னலின் கம்பிகளில் சிக்கி தொங்கிக்கொண்டிருந்த பாவிகா சிறுமியை பாதுகாப்பாக மீட்டார். இதனால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
இந்த சம்பவம் கோப்டேநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், குழந்தையை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரருக்கு பாராட்டுகள் குவிந்தன.
English Summary
A child hanging in the air shocking scenes