திருமணம் ஆகாமல் இருந்தால், கணவன்-மனைவி இடையே ஒற்றுமை இல்லை என்றால் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லுங்கள்; சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி..! - Seithipunal
Seithipunal


உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அஜய் பட் , 'திருமணம் ஆகவில்லை என்றால் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்லுங்கள்' என பேசியதை எதிர்க்கட்சிகள் அரசியல் சார்ந்தவர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பொதுக்கூட்டத்தில் அஜய் பட் பேசியபோது ஆன்மீக நம்பிக்கையையும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களையும் இணைத்துப் பேசியுள்ளார். அதாவது, ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலோ, கணவன்-மனைவி இடையே ஒற்றுமை இல்லையெனிலோ அல்லது பசு மாடு பால் தரவில்லை என்றாலோ…‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லுங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்றுகூறியுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் வெளியான இவரது பேச்சிக்கு  நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.  முக்கியமாக, திருமணம், குடும்ப உறவு, விவசாயம் போன்ற நுணுக்கமான சமூகப் பிரச்சினைகளை மத நம்பிக்கையுடன் மட்டும் இணைத்து பேசுவது, மக்களை தவறாக வழிநடத்துவதாக விமர்சித்து வருகின்றனர்.

அத்துடன், இது பொது மக்களிடையே தவறான புரிதல்களை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அஜய் பட்டின் ஆதரவாளர்கள் இந்த விமர்சனங்களை மறுத்து வருகின்றனர். இது இறை நம்பிக்கை சார்ந்த ஒரு சாதாரண பேச்சு மட்டுமே என்றும், மக்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் இப்படிக் கூறியதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அஜய் பட்  முன்னதாக, மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A BJP MP has landed in controversy after saying If you are unmarried say Jai Shri Ram and everything will be alright


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->