இந்தி கற்றுக்கொள்ளவில்லை என்றால், டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்; ஆப்பிரிக்க நாட்டவரை எச்சரித்த பாஜக கவுன்சிலர்..!
A BJP councilor warned an African national that he would have to leave Delhi if he did not learn Hindi
ஆப்பிரிக்க நாட்டவரை, ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும் என பாஜக கவுன்சிலர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மொழிகள் வாரியாக பல்வேறு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. ஆனாலும், அவ்வப்போது மொழிகள் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக இந்தி மொழி பேசப்படாத மாநிலங்களில் அம்மொழி திணிக்கப்படுவதாக போராட்டங்கள் நடைபெறுகிறது.
தலைநகர் டெல்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த சூழலில் 'ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும்' என ஆப்பிரிக்க நாட்டவரை பாஜக கவுன்சிலர் ஒருவர் மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த வீடியோவில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, பூங்கா ஒன்றில் கால்பந்து விளையாடும் ஆப்பிரிக்க மக்களை எதிர்கொள்கிறார். அவர்களிடம் இந்தி மொழியில் சத்தமாகப் பேசும் அவர், ''ஏன் இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை'' என்று கேள்வி எழுப்புவது காண முடிகிறது.
அதன் பின்னர், ''ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ளவில்லை என்றால், டெல்லியைவிட்டு வெளியேற வேண்டும'' எனவும் அவர்களை எச்சரிக்கிறார். தற்போது பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரியின் இந்த இந்தி மொழி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அவர் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதாவது, பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதைப்பொருள் தொடர்பாக தனக்குப் பலமுறை புகார் வந்ததாகவும், அதனால்தான் தான் பூங்காவிற்கு வருகை தந்தேன். ஆனால், யாரையும் அச்சுறுத்தும் நோக்கம் தனக்கு இல்லை. தகவல் தொடர்பை எளிதாக்க இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியாக தெளிவு படுத்தியுள்ளார்.
English Summary
A BJP councilor warned an African national that he would have to leave Delhi if he did not learn Hindi