பணம் இல்லை; நோய்வாய்ப்பட்ட மனைவியை 600 கி.மீ தூரம் சைக்கிள் ரிக்ஷாவில் வைத்து தள்ளி சென்ற 70 வயது முதியவர்..! - Seithipunal
Seithipunal


70 வயது முதியவர் ஒருவர், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்கு பணம் இல்லாத காரணத்தினால், 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே மனைவியை வைத்து கடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தின் தொலைதூர கிராமத்தை சேர்ந்த இந்த முதியவர், தனது மனைவியை ஒரு சைக்கிள் ரிக்ஷா வானில் படுக்க வைத்து, அங்கிருந்து கட்டாக் நகரில் உள்ள மருத்துவமனைக்குத் தள்ளிக்கொண்டே சென்றுள்ளார். 

தன்னுடைய கிராமத்திலிருந்து கட்டாக் சென்று, மீண்டும் அங்கிருந்து வீடு திரும்பியது என மொத்தம் 600 கி.மீ தூரத்தை அவர் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கடந்துள்ளார். தன்னிடம் காசு இல்லாத காரணத்தினால், மனைவியைக் காப்பாற்ற தனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான் என்றும், அதனால் ரிக்ஷாவிலேயே மனைவியை அழைத்துச் சென்றதாக  அம்முதியவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 70 year old man pushed his sick wife for 600 km in a cycle rickshaw


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->