65 வயது மூதாட்டிக்கும், 75 வயது முதியவருக்கும் திருமணம்.! ம.பி அரசு திட்டத்தின் கீழ் ரூ.11,000 பரிசு.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள தியோரி பகுதியை சேர்ந்தவர் மோகனியா(65). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 75 வயதான பகவான்தின் என்பவருக்கும் கடந்த வியாழக்கிழமை முக்யமந்திரி கன்யாதன் யோஜனா திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில ஆண்டுகளாக லீவ்-இன் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தனர்.

மேலும் இந்த திருமணத்தை மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ராம்கேலாவான் பட்டேல் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு முக்யமந்திரி கன்யாதன் யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 11 ஆயிரம் பரிசு தொகையும், ரூ.34,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது.

இதில் மோகனியாவுக்கு இது முதல் திருமணமாகும். மேலும் மாற்றுத்திறனாளியான பகவான்தின்னுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவரது மனைவி 11 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 65 year old woman and a 75 year old man got married in madhya pradesh


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->