ம.பி-யில் கொடூரம்; 07 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்; கால்வாயில் வீசி கொலை செய்த 17 வயது சிறுவன் கைது..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலம் பார்வானி மாவட்டத்தில் வசிக்கும் 07 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனதை அடுத்து, போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது குறித்த சிறுமியின் உடல் அருகில் உள்ள கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணை நடத்தினர்.  இதில், சிறுமியின் உறவினரான 17 வயது சிறுவன் சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளான். இது தொடர்பாக ராஜ்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குறித்த சிறுவனைப் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பார்வானி மாவட்ட எஸ்பி ஜெகதீஷ் டாவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 25-ஆம் தேதி இரவு சிறுமி வீட்டில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, குறித்த சிறுவன் அவளைக் கடத்திச் சென்று, இந்திரா சாகர் கால்வாய் பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த நிலையில், வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டதால், பயந்துபோன அந்தச் சிறுவன் சிறுமியைத் தூக்கி கால்வாயில் வீசிக் கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், கடுமையான காயங்கள் இருந்ததாகவும், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கூற்றை குற்றத்தை அரங்கேற்றிய சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  எஸ்பி ஜெகதீஷ் டாவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 17 years old boy has been arrested in Madhya Pradesh for kidnapping raping and murdering a 7 years old girl


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->